மதுரை விமான நிலையத்தில், கஞ்சாவை காட்டி முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் அளிக்க முயன்றதாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் கொடைக்கானல் செல்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை விமானநிலையம் வந்தார்.
அவரிடம் பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியன் கஞ்சாவை காட்டி புகார் அளிக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.