உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான தி – வேர்ல்ட் விசாகப்பட்டினம் சர்வதேச கப்பல் முனையத்தை வந்தடைந்தது.
விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கப்பல் முனையத்துக்கு, முதன்முறையாக உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான தி – வேர்ல்ட் வந்தடைந்தது.
167 ஆடம்பர சூட் ரூம்களைக் கொண்டுள்ள இக்கப்பலானது, கடலில் மிதக்கும் நகரம் என சுற்றுலாப் பயணிகளால் வர்ணிக்கப்படுகிறது.
2002-ம் ஆண்டு முதல் தனது பயணத்தைத் தொடங்கிய தி – வேர்ல்ட் சொகுசு கப்பலானது, இதுவரை 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைமுகங்களை பார்வையிட்டுள்ளது.
இந்நிலையில் இக்கப்பலில் 2024-ம் ஆண்டு உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.
தற்போது அவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.