உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ மக்களவை தொகுதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக லக்னோவில் உள்ள தக்ஷின் முகி ஹனுமன் கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார்.
பின்னர் ஊர்வலமாக சென்ற அவருக்கு சாலையின் இரு புறமும் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லக்னோ மக்களவை தொகுதியில் ஐந்தாம் கட்டமாக மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.