திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பால் பண்ணை அருகே, இளைஞர்கள் சிலர் மது போதையில் வாகனங்களையும், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் சேதப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாத்தூர் எம். எம்.டி.ஏ மூன்றாவது தெருவில் நள்ளிரவு 2 மணியளவில், ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுபோதையில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-ற்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.