கடலூரில் கடைகளை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதால் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலையில் உள்ள காய்கறி சந்தையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
தற்போது புதிதாக தமிழக அரசால் நவீன காய்கறி மார்க்கெட் கட்டும் பணி அங்கு தொடங்க உள்ளது. எனவே கடைகளை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகிகள், வியாபாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து காய்கறி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.