திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்தரை பிரம்மோற்சவ தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயார் சமேத கரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.