கன்னியாகுமரி அருகே மகனை பார்க்க வீட்டின் மாடியை ஏறி குதித்த நபர் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் – ஜெப பிரியா தம்பதிக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபபிரியா தனது மகனுடன்
பிலாங்காலையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மாமியார் வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகனை பார்ப்பதற்காக, பிபின் பிரியன் மாடியில் ஏறி குதித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மைத்துணர்கள் இருவரும், பிபின் பிரியனை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிபின் பிரியனை மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து இருவர் தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட கட்டி வைக்கப்பட்டிருந்த தனது தந்தையை, அவரது மகன் மழலை மொழியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது.