சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரை திருவிழா, கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் 7-ம் நாள் திருவிழாவில் சித்திரை திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அந்தவகையில் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும்,
கோவிந்தா… கோவிந்தா… என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது செல்லும் வழியெல்லாம் தேரின் சக்கரத்துக்கு அடியில் உப்பு வைத்து வழிபட்டனர்.
இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் நெற்றியில் நாமமிட்டுக் கொண்டு திவ்ய பிரபந்தம் பாடி சென்றனர்.