புதுச்சேரியில் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெரும் தொண்டாற்றிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகைக்கு அருகேயுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.