திருப்பூரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் சீரற்ற முறையில் இருப்பதால், பயிர்கள் கருகி அழியும் சூழ்நிலை நிலவுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீரற்ற மின் விநியோகத்தால், தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பயிர்கள் கருகுவதைத் தவிர்க்க மின் விநியோகத்தை சீர் செய்ய வேண்டுமென, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.