தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் மீன்கள் செத்து மிதப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
இதனால் குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் அணைக்கட்டில் மீன்கள் செத்து மிதப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.