கரூரில் வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் மர்ம நபர் திருட முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாங்கல் அடுத்த மாரிகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் வெயிலின் தாக்கம் காரணமாக குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் உறங்கிக் கொண்டிருந்தவர்களிடம் திருட முயன்றுள்ளார். சத்தம் கேட்கவே அங்கிருந்து அவர் தப்பிச் சென்றார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.