திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக நீர் – மோர் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் நீர்-மோர் மற்றும் ஓ.ஆர்.எஸ் பொடிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அந்தவகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பாக இலவச நீர்-மோர் வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
இதேபோல் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இலவச நீர்-மோர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டது.