முக்குருத்தி தேசிய பூங்காவில் உள்ள தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
நீலகிரி வரையாடு அழிவின் விளிம்பில் உள்ளதால் அதனை பாதுகாக்க அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் நீலகிரி வரையாடு ஆராய்ச்சியாளர்கள், வனப்பணியாளர்கள் என 10 குழுவினர் ஈடுபட உள்ளனர்.