தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் அருகே, பேரக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக 80 வயது முதியவர் தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
வஸ்திரம் தாண்டா ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த சமிதா நாயக் – லாலம்மா தம்பதியின் பேரன், பேத்திகள், தங்களது தாத்தா, பாட்டிக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தால் எப்படியிருக்கும் என பொழுதுபோக்கிற்காக பேசி கொண்டனர்.
பின்னர் இதனை உண்மையாக்க விரும்பிய அவர்கள், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், தங்களது தாத்தா, பாட்டிக்கு திருமணம் செய்து வைத்தனர்.