மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார்.
திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு நடைபெற்ற தனது உறவினரின் அறுபதாம் கல்யாணத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளை சுற்றி வந்து அன்புமணி வழிபட்டார்.