தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே 5-ம் வகுப்பு மாணவி ஒருவர், மழை பெய்ய வேண்டி வருண பகவானை வணங்கி மலைக்குன்றில் யோகாசனம் செய்து அசத்தினார்.
கழுகுமலை சமணர் படுகையில், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் மழை பெய்ய வேண்டி யோகானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தவகையில் கோவில்பட்டியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி ரவீனா, மழை பெய்ய வேண்டி வருண பகவானை வணங்கியபடி, 30 நிமிடங்களுக்கும் மேலாக, 20 வகையான ஆசனங்களை செய்து அசத்தினார்.
அப்போது பள்ளி மாணவி ரவீனாவை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.