காஞ்சிபுரம் புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான அஷ்டபுஜ பெருமாள் கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பியவாறு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.