ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் குவியும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான வகையில் கடலில் குளியலிட்டு வருகின்றனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல் நீரோட்டம் வேறு திசைக்கு திரும்பி மீண்டும் மணல் பரப்பு உருவாகி உள்ளது.
இந்நிலையில் இதனைக் காண வருகை தரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஆர்ப்பரித்து சீறும் அலைகளுக்கு மத்தியில் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர்.
ஆகையால், கூடுதல் காவலர்களை நியமித்து விபரீதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.