கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவல்ஸ்தலம் முத்தாரம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, கொதிக்கும் மஞ்சள் நீரால் சாமி அருள் வந்தவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
குலசேகரம் காவல்ஸ்தலம் புத்தன்தெரு முத்தாரம்மன் கோயில் சித்திரை கொடைவிழா, கடந்த 28-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான, மூவாற்று முகத்திலிருந்து பூ நீர் எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது கழுவனதிட்டை, திருவட்டார் வழியாக ஊர்வலம் சென்ற பகுதிகளில், பக்தர்கள் கொதிக்கும் மஞ்சள் நீரை சாமி அருள் வந்தவர்களின் மேல் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.