திருப்பூரில் தார் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டுக்கு உட்பட்ட முத்தனம் பாளையம் – விஜயாபுரம் இணைப்பு சாலையை அமைக்க இரண்டு மாதங்களுக்கு முன்பாக டெண்டர் விடப்பட்டது.
இருப்பினும் இதுவரையில் தார் சாலை அமைக்கப்படாததால் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், உடனடியாக தார் சாலை அமைத்திட வேண்டும் எனக் கோரி, மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.