புதுச்சேரியில் சிக்னலில் நிற்கும் காவலர்களுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் மோர், பழசாறு போன்றவற்றை வழங்கி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வரும் வேளையில் புதுச்சேரியில் பல்வேறு சமூக அமைப்பினர் நீர், மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சாரம் பகுதியில் வசித்து வரும் ஜோசப் என்ற மாற்றுத்திறனாளி, சிக்னலில் நிற்கும் காவலர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு மோர், பழசாரு உள்ளிட்டவற்றை வழங்கி வருவது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.