டெல்லிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா, தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி 157 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினர்.