காசாவில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
தெற்கு காசாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று வீடுகளில் இருந்த 20 பேர் உயிரிழந்தனர்.
பலர் காயமடைந்தனர். 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 66 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதலால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் எகிப்து மற்றும் கத்தார் நாடுகளைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் ஹமாஸ் படையினருடன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படும் நிலையில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.