கோவையில் சுற்றுலா வேன் விபத்தில் சிக்கியதில் 20- க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர்.
கோடை விடுமுறையை யொட்டி திருவாரூரை சேர்ந்த 30 பேர் வேனில் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா முடிந்து பொள்ளாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் வால்பாறை சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவு பாறையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 20- க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.