தமிழ்நாட்டில் 2, 3 மற்றும் 4-ம் தேதி வெப்ப அலை வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் வரும் 2, 3 மற்றும் 4-ம் தேதி வெப்ப அலை வீச கூடும் என்றும், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.