திருப்பூரில் திருமணமான ஆறே மாதத்தில் கர்ப்பிணி பெண் கணவனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசியை அடுத்து குன்னத்தூர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், சந்திரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி 6 மாதமான நிலையில் சந்திரா 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முத்துக்குமாரின் வீட்டுக் கதவு திறக்காததால் பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த போலீசார் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.