தேனியில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியின்போது வனத்துறை பணியாளர்களை காட்டு மாடு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூரில் உள்ள கண்ணகி கோவில் மற்றும் விண்ணேற்றிப் பாறை வனப்பகுதிக்கு, வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக வனத்துறை பணியாளர்கள் சென்றிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த காட்டு மாடு ஒன்று, வன பணியாளர்களான பூபதி, சுமன் ஆகிய இருவரை முட்டித் தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.