தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை 55 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதன்பின் சற்று குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.