கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய 3 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மணக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக ஒரே பைக்கில் வந்த விஜின், அஜித் மற்றும் ரஞ்சித் ஆகிய மூன்று இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர்கள் மூவரும், கடந்த 22-ம் தேதி இரவு சுங்கான்கடை மற்றும் கருங்கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பைக்குகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து 3 பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீசார், இளைஞர்கள் மூவரையும் இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.