கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காரும் பைக்கும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள ஆடூர் குப்பம் அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில், வடலூர் குமரன் நகரை சேர்ந்த மலர் வண்ணன் என்ற அரசு பள்ளி ஆசிரியரும், அவரது மனைவி விஜயலதா என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
இருவரும், குறிஞ்சிப்பாடியில் முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில், கடலூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.