மே 1-ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யாரு எங்க இவர பத்தி கேட்டாளும் இவரு கிட்ட எனக்கு புடிச்சதுன்னா தன்னம்பிக்கைன்னு சொல்லுவாங்க அந்த தன்னம்பிக்கைக்கு பேர் போனவருதான் நடிகர் அஜித்குமார்.
starting pointல ரொம்ப அடிவாங்கினவரு தான் அஜித். பிரேம புஸ்தகம்ன்ற படத்துல ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது மகிழ்ச்சி ரொம்ப நாளுக்கு தங்கல. படம் ஓகே ஆன கொஞ்ச நாளுலே படத்தோட இயக்குநர் இறந்து போறாரு.
பாசமலர்ல ஹீரோவா நடிக்க இருந்த அஜித் சைட் ரோல்ல நடிச்சிருப்பாரு. அமராவதி படம் நல்ல வரவேற்ப பெற்றாலும் பெருசா அஜித்த கொண்டாடல. அப்போ இருந்தே அஜித்த அன்லக்கின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
இருந்தாலும் துவண்டு போகமா பேசுறத பேசுங்க என் மேல எனக்கு நிறையா நம்பிக்கை இருக்குன்னு பல எதிர் பேச்சுகள தவிர்க்க ஆரம்பிச்சாரு அஜித். அந்த டையத்துல தான் ஆசை படம் கைவசமாக கிடச்சுச்சு. அந்த படத்துக்கு பிறகு அஜித்துக்கு பெண் ரசிகர்கள் நிறையா வர ஆரம்பிச்சாங்க.
அதுக்கு அப்பறம் காதல் கோட்டை, காதல் மன்னன்னு அடுத்தடுத்த படங்கள ஓரளவுக்கு கைகொடுக்க ஆரம்பிச்சுச்சு. முக்கியமா சொல்லனுன்னா அஜித் நெகடிவ் ரோல்ல நடிச்சா அந்த படங்கள் எல்லாம் ஹிட் தான். இந்த பட்டம் எங்க கிடைக்கிதுன்னா வாலி, சிட்டிசன் படங்கள.
அஜித்த க்யூட் பாய் லுக்குல பாத்தாருப்போம், ஸ்டைல் லுக்ல பாத்திருப்போம் அமர்களத்துக்கு பிறகு மீண்டும் ரௌடி கெட் அப்ல பாத்த படம் தீனா. இந்த தீனா படம் தான் அஜித்துக்கு தலன்ற இன்னொரு அடையாளத்த கொடுத்துச்சு.
நடிப்ப தாண்டி அஜித்துக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம் ரேஸ். அஜித் ஒரு ரேஸர் அப்படீங்கிறதால அவரோட ஒவ்வொரு படங்களையும் ஏதாவது ஒன்னு கார் ஓட்டுற மாதிரி சீன் இருக்கும். இல்ல பைக் ஓட்டுற மாதிரியான சீன் இருக்கும். இந்த சீன் எப்படா வரும்னு தியேட்டர்ல ரசிகர்கள் ரெடியா இருப்பாங்க.
அஜித் ஒரு f1 racer அப்படின்றத தாண்டி aero moduler-ம் கூட. ஒரு சில நடிகர்களுக்கு தான் பைலட் லைசன்ஸ் இருக்கு. அந்த பைலட் லைசன்ஸ் வெச்சிருக்க நடிகர்கள் லிஸ்ட்ல அஜித்தும் இருக்கிறாருன்றது தான் சிறப்பு.
பொதுவா புது இயக்குநர்களோட இயக்கத்துல நடிக்க பிரபல நடிகர்கள் வேணான்னு சொல்லுவாங்க ஆனா அஜித் அப்படி இல்ல நிறையா புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாறு. இன்னும் சொல்லனுன்னா ஷுட்டிங் ஷ்பாட்டுல தடால் புடால் விருந்தும் நடக்கும் பைக் எப்படி ஓட்டுறதுன்ற டீச்சிங்கும் நடக்கும்.
நடிகர் அஜித்துக்கு ரேஸ்-ஆல அடிபடாத இடமமே இல்ல. தண்டுவடத்துல l4, l5 இன்சுரி. இந்த ஒரு இன்சுரிய வெச்சுகிட்டு ரதத்தம் சொட்ட சொட்ட டெடிகேஷனா தனக்கான ஆக்ஷன் காட்சிகள விட்டு கொடுக்காம சரியா செய்றதுல கில்லாடி.
நடிகர், ரேசர், போட்டோகிராபர்ன்னு எல்லா திறமை இருந்தாலும் அலட்டிகாம இருக்குற அஜித் அவரோட படங்கள்லையும் பெருசா அலட்டிக்கிறது இல்ல. அஜித் படங்கள பொருத்தவர நோ ஆடியோ லான்ச், நோ ரசிகர் மன்றம்.
நோ மோர் பிரோமோசன்ஸ். அந்த காசுக்கு குடும்பத்த பாத்துகோங்க. பேமலி தான் இம்பார்ண்டெண்ட். புகழ் தேடுற உலகத்துல இவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும் இப்படி ஒருத்தர் சொல்றத சிலர் எதிரா பேசினாலும் அஜித்த பலர் நல்ல மனுஷன்னு வாழ்த்திட்டு போறாங்க.
எப்பவுமே ஹான்ஸமா இருக்குற அஜித், என்றும் ஹான்சமா இருக்குற அஜித்தோட தோற்றத்த ஒவ்வொரு படங்களையும் பாக்குறதுக்கு ஆர்வமா இருப்போம் அப்படிதான் விடாமுயற்சி, குட் பேட் அக்லிலையும் பாக்க ஆர்வமா இருக்கிறோம்.
டான்ஸ் ஆட மாட்டாறு பைட் பன்ன தெரியாது, எல்லாருடையும் பலக மாட்டாறு ஒதுங்கி இருப்பாறு, முன்கோபம்ன்னு எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தன்னோட தன்னம்பிக்கை மற்றும் உழைப்பாள எல்லாருக்கும் உதாரணமா இருக்காறு. வெற்றி தோல்விய தாண்டி நிஜத்துல ஒரு நல்ல மனிதர். அதனால் தான் அஜித்த தமிழர்கள தாண்டி உலக நாடுகளிலும் எல்லாரும் கொண்டாடுறாங்க.