உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே விவாகரத்து பெற்று வீட்டிற்குத் திரும்பிய மகளுக்கு மேள, தாளங்கள் முழங்க வரவேற்பளித்த தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இன்ஜினியராக பணியாற்றி வரும் அனில் குமார் என்பவரின் மகள் ஊர்வி என்பவருக்கும், கணினி பொறியாளர் ஒருவருக்கும், கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது.
வரதட்சணை கொடுமை காரணமாக விவாகரத்து பெற்ற ஊர்வி வீடு திரும்பிய நிலையில், திருமணத்தின்போது அவரை எப்படி அனுப்பி வைத்தோமோ அதே போன்று அவரை வீட்டிற்கு அழைத்து வர விரும்புவதாகக் கூறி, ஊர்வியின் தந்தை மேள, தாளத்துடன் வரவேற்பளித்தார்.