நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களால் ‘தல’ என்றும்; ‘ஏ.கே’ என்றும் அழைக்கப்படும் அஜித் குமார், இன்று தனது 53ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களைக் கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், நடிகர், சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 1, 2024