நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை ஒட்டி, அவர் நடிப்பில் வெளியான தீனா, மங்காத்தா, பில்லா ஆகிய படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் அஜித்தின் 53-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதனை ஒட்டி, முருகதாஸ் நடிப்பில் அஜித் நடித்த தீனா திரைப்படம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கில், தீனா திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.