தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு! - சென்னை வானிலை மையம்!
Oct 4, 2025, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு! – சென்னை வானிலை மையம்!

Web Desk by Web Desk
May 1, 2024, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குளச்சல் (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 3, இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), பெரியாறு (தேனி) தலா 2, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), வத்திராயிருப்பு (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை :
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 42.5° செல்சியஸ், ஈரோட்டில் 42.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 41.3° செல்சியஸ், சேலத்தில் 40.8° செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.6° செல்சியஸ், தர்மபுரி, மதுரை (நகரம்) & திருத்தணியில் 40.1° செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 39.4° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.9° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 01.05.2024 மற்றும் 02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

03.05.2024 முதல் 05.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06.05.2024 மற்றும் 07.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

01.05.2024 முதல் 03.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 04.05.2024 & 05.05.2024:அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை குறையக்கூடும்.

01.05.2024 முதல் 05.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 01.05.2024 முதல் 03.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

01.05.2024 முதல் 05.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

01.05.2024 முதல் 05.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

01.05.2024 முதல் 03.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Chance of rain in Tamil Nadu and Puduvai at a few places! - Chennai Meteorological Center!
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்கள் கஷ்டங்களில் இருந்துவிடுபட சிறப்பு யாகம்!

Next Post

தனியார் கல்குவாரியில் வெடிவிபத்து! – உரிமையாளர் கைது !

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies