ஆந்திர மாநிலம் அரக்கு பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய மகளிர் ஆணைய தலைவரும், பாஜக முக்கிய பிரமுகருமான குஷ்பூ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரக்கு நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக கீதா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட குஷ்பூவிற்கு, அப்பகுதி மலை வாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.