நாகையில் சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பில் உரிய நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நாகூர் அருகே பனங்குடியில், சிபிசிஎல் ஆலை 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நில உரிமையாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக இழப்பீட்டு தொகையை வழங்காமல், அதிகாரிகள் நில அளவிடும் பணியை மீண்டும் தொடங்க இருந்தனர்.
இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள், பனங்குடி பகுதியில் விவசாய நிலத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.