ராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற, இலங்கை தமிழர்கள் இருவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வேதாளையைச் சேர்ந்த 4 பேரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, இலங்கை வவுனியாவை சேர்ந்த இலங்கை தமிழர்கள் இருவரும், விமானம் மூலமாக கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்திருப்பதும், அவர்கள் அகதியாக பதிவு செய்ய முடியாததால் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இலங்கை தமிழர்கள் இருவர் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.