சிவகங்கை கீழப்பூங்குடி ஏழை காத்த அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில், நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி எடுக்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
பின்னர் முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடத்தப்பட்டு ஊருணியில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. இதில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.