சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நக்சலைட்டுகள் மீது நடைபெற்ற என்கவுண்டரில், பலியான 10 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
நக்சல்கள் மீதான தாக்குலை தீவிரவாத தடுப்பு படையினர் வேகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாராயண்பூரில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தில், பாதுகாப்புப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் பலியான 10 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், நக்சல்கள் பயன்படுத்திய ஆதார் கார்டு, மளிகைப் பொருட்கள், மாத்திரை மற்றும் நச்சல் ஆதரவு கையேடு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.