நவகிரங்களில் சுப காரகனாக போற்றப்படும் குரு, மேஷ ராசியில் இருந்து ரிஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
நவகிரங்களில் நன்மை மட்டுமே செய்யும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான், வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சி அடைவது வழக்கம்.
அந்த வகையில் குரு பகவான் இன்று மாலை 5 மணி 19 நிமிடத்திற்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில், குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
வாசமிகு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட குரு பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல, குரு பகவான் அமைந்துள்ள புளியரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குரு பெயர்ச்சி விழா கோலகமாக நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.