குஜராத் மாநிலம் உருவான தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் உருவான தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர் . என் ரவி கலந்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி,
குஜராத் மாநிலம் உருவான தினத்தில், அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் என தெரிவித்தார். மேலும், “குஜராத் மாநிலம், நமது தேசத்துக்கு அளப்பரிய பங்களிப்புகளை வழங்கியுள்ளது, சிறந்த தொலைநோக்கு தேசிய தலைவர்களையும், சீர்திருத்தவாதிகளையும் வழங்கியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “குஜராத் மாநிலத்தின் வளமான கலாசார பாரம்பரியம், பல்லுயிர் பன்முகத்தன்மை மற்றும் வலுவான, சுயசார்பு பாரதத்தை கட்டமைப்பதில் குஜராத் மாநிலம் வியக்கும் வகையில் முன்னேற்றம் கண்டு வருகிறது” என்றார்.