நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனம் மீதான வழக்கில் 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நியூஸ்கிளிக் இணையதளம் பணம் பெற்றுக்கொண்டு சீனாவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அந்நிறுவனம் தொடர்புடைய 88 இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக முதன்மை ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மந்றும் மனித வளத்துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.