தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரபல் நடிகர்கள் உள்ளிட்டோர் பேசுவது போல் தேர்தல் தொடர்பான ‘டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக அமீர் கான், ரனவீர் சிங் உள்ளிட்டோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.