நிலவில் துருவப் பகுதியில் உள்ள பள்ளங்களில் நீர் பனிக்கட்டி வடிவில் உறைந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், துருவப் பகுதியில் உள்ள பள்ளங்களின் மேற்பரப்பில் உள்ளதை விட, கீழ்பரப்பின் முதல் 2 மீட்டர் உயரத்திற்கு ஐந்து முதல் எட்டு மடங்கு வரை பனியின் அளவு அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நிலவு பயணங்களில் இந்த பனியின் மாதிரியை சேகரிக்கும் நோக்கில் சந்திரனில் துளையிடுவது முதன்மையான நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வட துருவப் பகுதியில் உள்ள பனியின் அளவு தென் துருவப் பகுதியை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தின் ரேடார் தரவுகள் அனுப்பிய தரவுகள், நிலவின் துருவப் பள்ளங்களின் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கூறியதை இந்த ஆய்வு முடிவு உறுதி செய்கிறது.