சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி சல்மான் கான் வீட்டின் வெளியே மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி சென்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக நால்வரை மும்பை காவல்துறை கைது செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனுஜ் தபன் என்பவர் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஜ் தபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.