சென்னையிலுள்ள பிரபல திரையரங்கில் கில்லி திரைப்படத்தின் பேனரை அஜித் ரசிகர் ஒருவர் கிழித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை ஒட்டி தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்தார்.
இந்நிலையில், தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு அஜித் ரசிகர் வீடியோ வெளியிட்டுள்ளார்.