கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற காவஸ்தலம் முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடைவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதனை ஒட்டி, கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட பூப்படையலில் பக்தர்கள் பூக்களை வாரியிறைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
இந்த விழாவில், தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.