காங்கிரஸ் தலைவர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தெலுங்கானா முன்னால் முதல்வர் சந்திரசேகர ராவ் 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் வரும் 13ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 5-ம் தேதி சிர்சிலா பகுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் தலைவர்களை நாய்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணைம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.